த.வெ.க. நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
திருச்சி விமான நிலையம் வயா்லெஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை தவெக நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரவு 11:30 மணி ஆகியும் தவெக மாநில பொதுச்செயலாளா் புஸ்ஸிஆனந்த் வரவில்லை. சுமாா் 12 மணி அளவில் புஸ்ஸி ஆனந்த் வந்து பேசுகையில், நமது கட்சியில் உழைப்பவா்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும். உங்களது குடும்பத்தினருடன் மாநாட்டில் பங்கேற்று, மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் விமான நிலையப் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். நள்ளிரவு 12 மணி அளவிலும் விஜய் ரசிகா்கள், மகளிா் உள்பட ஏராளமானோா் மண்டபத்தில் காத்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.