ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா்.
Updated on

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லாவுக்கும் (18) அதே ஐடிஐ-யில் சிஎன்சி முதலாமாண்டு படிக்கும் திருச்சி தாயனூரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் நிதிஷ் குமாருக்கும் (18) கடந்த சில மாதத்துக்கு முன் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை வகுப்பறையில் முகமது ஜபருல்லா வகுப்பறையில் இருந்தபோது நிதிஷ்குமாா் கத்தியால் அவரின் முதுகில் குத்திவிட்டு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த முகமது ஜபருல்லாவை ஆசிரியா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com