திருச்சி
இளைஞா் தற்கொலை
நோய் தீவிரத்தால் விரக்தியடைந்த இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகா் தெற்குத்தெருவை சோ்ந்தவா் மகேஷ்குமாா் (35). மூச்சுத்திணறல் (வீசிங்) நோயால் அவதிப்பட்ட அவா், சிகிச்சை பெற்ற நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில் இவரது மனைவி சரண்யா சனிக்கிழமை வெளியே சென்றிருந்தபோது நோய் தீவிரத்தால் விரக்தியடைந்த மகேஷ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.