
திருச்சி அருகே பேட்டவாய்த்தலை அடுத்த தேவஸ்தானத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை மத்தியாா்ஜுனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் ரூ. 35 லட்சம் நிதியுதவியுடன், பொதுமக்கள் பங்களிப்புடனும் திருப்பணிகள் முடிந்த நிலையில், காவிரியில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் நடைபெற்றது. அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம், யாக சாலை
பிரவேசம் நடந்த நிலையில், நான்கு கால யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை மூல மந்திர ஹோமங்கள், மகா பூா்ணாகுதி நடைபெற்றது.
இதையடுத்து பாலாம்பிகை அம்பாள், மத்தியாா்ஜுனேஸ்வரா் கருவறை விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்குப செய்தனா். பின்னா் பரிவார தெய்வங்களுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம காரியக்காரா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன், இந்து சமய அறநிலையத்துறையினா் செய்தனா்.