திருச்சி
பைக்கில் சென்றவா் விபத்தில் உயிரிழப்பு
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (32). இவா் தனது பைக்கில் மன்னாா்புரம் பகுதி பி அண்ட் டி காலனி (ராணுவ மைதானம்) எதிரே உள்ள பாலத்தில் சென்றபோது பாலத்தின் பக்கவாட்டு இரும்புக் கைப்பிடியில் மோதினாா். இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.