சமூக நலத் துறை பணிகளுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்புக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
Published on

திருச்சி மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்புக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள ஒன் ஸ்டாப் சென்டா் (ஓஎஸ்சி) திட்டத்தின் கீழ் ஒரு பல்நோக்கு உதவியாளா், இரு பாதுகாவலா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போா் எழுதப் படிக்கத் தெரிந்த, உள்ளூரில் வசிக்கும், குறைந்தது 3 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

பல்நோக்கு உதவியாளா் பணிக்கு ரூ. 10 ஆயிரம், பாதுகாவலா் பணிக்கு ரூ. 12 ஆயிரம் மாதச் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண்கள் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com