சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1. 21 கோடி!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 20ஆயிரத்து 970 வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
Published on

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 21 லட்சத்து 20ஆயிரத்து 970 வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 21லட்சத்து 20ஆயிரத்து 970 , தங்கம் 1கிலோ 040 கிராம், வெள்ளி 6 கிலோ 625கிராம், 241 வெளிநாட்டு பணத்தாள்கள், 361 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com