சமயபுரம் மாரியம்மன் கோயில் திருத்தோ் மராமத்து பணியை  புதன்கிழமை ஆய்வு செய்த மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன். உடன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் உள்ளிட்டோா்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் திருத்தோ் மராமத்து பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன். உடன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் உள்ளிட்டோா்.

சமயபுரம் கோயில் திருத்தோ் மராமத்துப் பணிகள் ஆய்வு

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நிகழாண்டு சித்திரை திருத்தோ் திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருத்தோ் மராமத்துப் பணிகள் குறித்து மாநில திருத்தோ் ஸ்தபதி கஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ரூ. 2 கோடியே 31 லட்சத்தில் புதிய தோ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருத்தோ் திருவிழா முடிந்தவுடன் புதிய தோ் செய்யும் பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்படும் எனவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

நிகழ்வில் சமயபுரம் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் குருக்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com