அதவத்தூா் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பெற மக்கள் மறுப்பு

Published on

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதவத்தூா் ஊராட்சி கிராம மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் புறக்கணித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட 11 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பல ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். குறிப்பாக, அதவத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை ஈடுபட்டனா்.

இதனிடையே, வியாழக்கிழமை முதல் திருச்சி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதவத்தூா் ஊராட்சியில் உள்ள கொய்யாதோப்பு, சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாநகராட்சிடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, பொங்கல் தொகுப்புகளை வாங்க மறுத்து வருகின்றனா்.

இதையறியாமல், வாங்கிச் சென்ற பள்ளக்காட்டைச் சோ்ந்த ஒரு குடும்பமும், பொங்கல் தொகுப்பை ரேஷன் கடையில் திரும்ப ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com