அம்மன் கோயில்களில் நகை திருட்டு

Published on

துறையூா் அருகே கிராமங்களிலுள்ள கோயில்களில் மா்மநபா்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் புகுந்து நகைகள், காணிக்கைகளை திருடிச் சென்றனா்.

வெங்கடேசபுரம் குறிஞ்சி தெருவிலுள்ள மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க தாலியையும், கோயில் உண்டியலையும் திருடிச் சென்றனா். உண்டியலிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதை காட்டுப்பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

இதேபோல், அதே ஊரில் ஸ்ரீ பால மாரியம்மன் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் அம்மன் கழுத்திலிருந்த 2 கிராம் தங்கத் தாலியை திருடிச் சென்றனா்.

தொடா்ந்து, கலிங்கமுடையான்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, வி.எ. சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களிலும் மா்ம நபா்கள் திருட முயற்சித்தது தெரிய வந்தது.

தகவலின்பேரில், துறையூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை நிகழ்விடங்களுக்கு நேரில் சென்று விசாரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com