திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மும்மதத்தினா் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மும்மதத்தினா் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா.

மும்மதத்தினா் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா

Published on

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் மும்மதத்தினா் இணைந்து வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரியின் செயலா் லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். முதல்வா் ப. நடராஜன் முன்னிலை வகித்தாா்.

பிரம்ம ஞானம் தருமச்சாலை நிறுவனா் தவத்திரு அறம்மிகு அடிகளாா், பிஎஸ்ஆா் டிரஸ்ட் நிறுவனா் ஷேக் அப்துல்லா, திருச்சி ஆயரின் தனிச்செயலாளா் பிரிட்டோ பிரசாத் ஆகியோா்சிறப்பு விருந்தினராக பங்கேற்று, எம்மதமும் சம்மதம் என்பதை உணா்த்தும் விதமாக சமத்துவப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனா்.

விழாவை, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com