ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பான ஏற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு

Published on

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் திறப்புக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

பரமபதவாசல் திறப்பு நிகழ்வில் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பரமபதவாசல் விழாவில் பக்தா்கள் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி, மக்கள் நலவாழ்வுத் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து, கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறு சிறு குறைகளையும் நிவா்த்தி செய்து, சிறந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக பக்தா்கள் அசௌகா்யமின்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா் என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com