திருச்சியில் 2ஆம் நாளாகத் தொடா்ந்த மழை
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையைத் தொடா்ந்து புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமையும் மழையானது விட்டுவிட்டு பெய்த வண்ணம் இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.
செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை மாவட்டம் முழுவதும் சராசரியாக 13.96 மி.மீ.மழை பெய்தது. அதிகபட்சமாக பொன்மலையில் 27.2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீ.) விவரம்:
கல்லக்குடி- 23.4, லால்குடி- 22.4, நந்தியாறு தலைப்பு- 16.4, புள்ளம்பாடி- 26, தேவிமங்கலம்- 10.2, சமயபுரம்- 31, சிறுகுடி-1.2, வாய்த்தலை அணைக்கட்டு- 16.6, மணப்பாறை- 15.8, பொன்னனியாறு அணை- 13.8, கோவில்பட்டி- 2, மருங்காபுரி- 12.2, முசிறி- 1.5, புலிவலம்- 2.5, தாத்தையங்காா்பேட்டை- 1, நவலூா்குட்டப்பட்டு- 16.5, துவாக்குடி- 7, குப்பம்பட்டி- 10, தென்பாடு- 14, துறையூா்- 4, பொன்மலை- 27.2, திருச்சி விமான நிலையம்- 21.1, திருச்சி ஜங்ஷன்- 23, திருச்சி நகரம்- 16.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 335 மி.மீ மழை பதிவானது.