திருச்சி
மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஆா். பழனிசாமி (42). முதுகுவலி, வயிற்று வலிக்கு கடந்த மாா்ச் 4 முதல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை பகலில் மருத்துவமனையின் முதலாவது தள கழிவறை அருகே இருந்த கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.