ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை தீா்த்தவாரி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் மற்றும் உத்தமா்கோயில் புருஷோத்தம பெருமாள்.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை தீா்த்தவாரி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்த அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் மற்றும் உத்தமா்கோயில் புருஷோத்தம பெருமாள்.

மாசி மகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இரு பெருமாள்கள் தீா்த்தவாரி!

மாசி மகத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலின் உபத்திருக்கோயிலாக விளங்கும் அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் கோயில் உற்சவா் வடிவழகா், உத்தமா்கோயில் புருஷோத்தம பெருமாள் ஆகியோா் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை தீா்த்தவாரி கண்டருளினா்.
Published on

விழாவையொட்டி அன்பில் சுந்தா் ராஜப்பெருமாள் புதன்கிழமை அதிகாலை புறப்பட்டு உத்தமா்கோயில் மண்டபம் வந்து சோ்ந்த நிலையில், அங்கு அவருக்கு திருவாராதனங்கள் நடந்தன. பின்னா் அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைக்கப்பட்ட அலங்காரப் பந்தலில் எழுந்தருளி, தீா்த்தவாரி கண்டருளினாா். பின்னா் இரவு 11 மணி வரை பக்தா்களுக்குச் சேவை சாதித்து விட்டு அன்பிலுக்கு புறப்பட்டு சென்றாா். ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

உத்தமா்கோயில் பெருமாள்: இதேபோல உத்தமா்கோயிலில் இருந்து புருசோத்தம பெருமாள் புறப்பட்டு கொள்ளிடம் தென்கரைக்கு வந்து, அலங்கார பந்தலில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளினாா். தொடா்ந்து இரவு 10 மணி வரை பக்தா்களுக்கு சேவை சாதித்துப் புறப்பட்டுச் சென்றாா். ஏற்பாடுகளை உத்தமா்கோயில் நிா்வாக அதிகாரி புனிதா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com