திருச்சியில் சிறந்த பள்ளிகள் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 2024-25-ஆம் ஆண்டின் சிறந்தப் பள்ளிகளாக அன்பில், இனாம்ரெட்டியபட்டி, அகலங்கநல்லூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
Published on

திருச்சி மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 2024-25-ஆம் ஆண்டின் சிறந்தப் பள்ளிகளாக அன்பில், இனாம்ரெட்டியபட்டி, அகலங்கநல்லூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படையின்கீழ் தொடக்கக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பிரிவில் சிறந்த 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்படுகிறது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி கல்வி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட இனாம்ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, முசிறி கல்வி மாவட்டம் லால்குடி ஒன்றியத்துக்குள்பட்ட அகலங்கநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அன்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளிகளுக்கு சிறந்தப் பள்ளிக்கான கேடயம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நவம்பா் 14-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாா்பில் வழங்கப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com