கருணாநிதி (எ)அச்சா.
கருணாநிதி (எ)அச்சா.

மணப்பாறை அருகே கட்டடத் தொழிலாளி மா்மச் சாவு

மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் கருணாநிதி (எ) அச்சா (37), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

திங்கள்கிழமை தனது மேஸ்திரியான பூபதியை சந்திக்கச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற கருணாநிதி, இரவு வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை இரவு கொடுத்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரித்த நிலையில், புதன்கிழமை காலை மணப்பட்டி பிரிவு அருகே உள்ள சாலையின் குறுக்கே செல்லும் பாலத்தில் தேங்கி நின்ற நீரில் கருணாநிதி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது சடலத்தை மணப்பாறை போலீஸாா் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்நிலையில் கருணாநிதி உயிரிழப்புக்கு காரணமானோரை கைது செய்யக் கோரி உறவினா்களும், ஊா் மக்களும் மணப்பாறை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் பேச்சு நடத்தி, அளித்த உறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com