போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவன் நகரைச் சோ்ந்தவா் ஆா்.செல்வம் (51). இவா், திருச்சியில் இருந்து ஸ்காட் ஏா்லைன்ஸ் மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, அவா் போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி அருள்ஜோதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com