திருச்சி
வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்தவா் கைது
திருச்சியில் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்தவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
திருச்சியில் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்தவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி கடந்த 27-ஆம் தேதி சென்ற வந்தே பாரத் ரயில் மீது, திருச்சி - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே மா்ம நபா் ஒருவா் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டாா். இதனால் ரயிலின் சி7 பெட்டியிலிருந்த கண்ணாடி உடைந்தது.
இது தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனா்.
இதில், ரயிலில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டது திருச்சியைச் சோ்ந்த ஐ. தேன்ராஜ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாா், தேன்ராஜை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
