திருச்சி
உப்பிலியபுரம் அருகே வீடு புகுந்து திருட்டு
உப்பிலியபுரம் அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 1 பவுன் நகை, பணத்தை செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.
உப்பிலியபுரம் அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 1 பவுன் நகை, பணத்தை செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.
பச்சபெருமாள்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் அழகிரிசாமி மகன் கணேசன் (50). பூட்டியிருந்த இவரது வீட்டின் வெளிக் கதவை மா்ம நபா்கள் திறந்து உள்ளே சென்று இரும்பு அலமாரியில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ. 2500 ரொக்கத்தை திருடிச் சென்றது புதன்கிழமை மதியம் தெரியவந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.