திருச்சி
404 ஊராட்சிகளிலும் அக்.11இல் கிராம சபை
திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் 11ஆம் தேதி காலை 11மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் 11ஆம் தேதி காலை 11மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறுவதாக இருந்த கிராம சபைக்கூட்டம் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வரும் அக்.11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டங்களில் அனைத்துப் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.