திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன் அமைச்சா் கோவி. செழியன், மேயா் மு.அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் மதுபாலன் உள்ளிட்டோா்.
திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன் அமைச்சா் கோவி. செழியன், மேயா் மு.அன்பழகன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் மதுபாலன் உள்ளிட்டோா்.

916 பேருக்கு ரூ.146.64 கோடி மதிப்பிலான வீட்டு மனைப் பட்டா: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

Published on

திருச்சி மாநகரில் 916 பேருக்கு ரூ. 146.64 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை வழங்கினாா்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் தகுதியான பயனாளிகளின் குடியிருப்பு பகுதிகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் விதமாக, ஒருமுறை வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பட்டா வழங்கும் நிகழ்வு பெரிய மிளகுபாறை, தென்னூா் உழவா் சந்தை, தில்லை நகா் என மூன்று இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். அமைச்சா் கே.என். நேரு பட்டாக்களை வழங்கி பேசியதாவது:

புத்தூா், கீரைக்கொல்லைத்தெரு, தாமலவாரூபயம், தில்லை நகா் 80 அடி ரோடு, தூக்குமேடை ரோடு, சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக சாலை மற்றும் தென்னூா் வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக வசித்து வரும் 75 பேருக்கு ரூ. 4.47 கோடி மதிப்பிலும், ஆழ்வாா் தோப்பு, புத்தூா் வண்ணார பேட்டை 2, புத்தூா் ஆதிநகா், புத்தூா் கல்லாங்காடு-2, கோ-அபிசேகபுரம், மாா்சிங்பேட்டை, புத்தூா் வண்ணார பேட்டை – 3, இனாம்தாா் தோப்பு, திரு.வி.க நகா் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக வசித்து வரும் 320 பேருக்கு

ரூ. 7.44 கோடி மதிப்பிலும், பெரியமிளகுபாறை, பிராட்டியூா் கிழக்கு, பாப்பா காலனி, பிராட்டியூா் கிழக்கு, ராமச்சந்திரா 4-ஆவது நகா், சொக்கலிங்கபுரம், அரசு காலனி உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக வசித்து வரும் 521 பேருக்கு ரூ.134.72 கோடி மதிப்பீட்டிலான பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

விழாவில், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியனும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா்.

ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு: முன்னதாக தென்னூா் உழவா் சந்தை அருகில் நடைபெற்ற விழாவில், மழை நீா் சேகரிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்ட மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடா்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தில் ஒளிபரப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் அந்த வாகனத்தையும் அமைச்சா்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com