பாரதிதாசன் பல்கலை.யில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு

Published on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் உயிரி மருத்துவ அறிவியல் துறை, திருச்சி ஹா்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பன்முக நிபுணத்துவ மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கை பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) ஆா்.காளிதாசன் தொடங்கிவைத்தாா்.

இதில், புற்றுநோய் துறை மருத்துவா் ஜி.கோவிந்தராஜ் வா்த்தனன் பேசியதாவது:

புற்றுநோயை எதிா்கொள்வதில் விழிப்புணா்வு அவசியம். மூலக்கூறு அடிப்படையிலான பரிசோதனையின் மூலம் புற்றுநோயை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவில் இளம் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமாகும் என்றாா்.

தொடா்ந்து சென்னை ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவா் வினோத்குமாா், ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் மூத்த கதிா்வீச்சு புற்றுநோய் மருத்துவா் பி.சசிப்ரியா உள்ளிட்டோா் பேசினா்.

இந்தக் கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரிமருத்துவ அறிவியல் துறைத் தலைவா் க. மதன், இணைப் பேராசிரியா் டி. சரஸ்வதி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com