திருச்சி
திருவெள்ளறை கோயில் ஊழியா் பணியிடை நீக்கம்
பெண் பக்தரிடம் தவறாக நடந்து கொண்ட திருவெள்ளறை பெருமாள் கோயில் பணியாளா் பணியிடை நீக்கம்
பெண் பக்தரிடம் தவறாக நடந்து கொண்ட திருவெள்ளறை பெருமாள் கோயில் பணியாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் கோயிலில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ் (55) கோயில் பகுதியில் பெண் பக்தா் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டாராம்.
இச் சம்பவம் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடா்ந்து, விசாரணையின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் உத்தரவின்படி மேற்பாா்வையாளா் சுரேஷ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
