மண்சரிவை சீரமைத்த வனத்துறையினா்
திருச்சி
பச்சமலையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு
துறையூா் அருகே பச்சமலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
துறையூா் அருகே பச்சமலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சமலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழைாயல் சோபனபுரம் - டாப் செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் பச்சமலை சாலையின் ஏழாவது வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்டு, சாலையின் குறுக்கே மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன.
இதனால் அப் பகுதியில் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த துறையூா் வனத்துறையினா் ஜேசிபி வாகன உதவியுடன் மண் சரிவை அகற்றி போக்குவரத்தைச் சரி செய்தனா்.

