பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை, சிறுகமணி, அளுந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் அக். 14 (செவ்வாய்க்கிழமை ) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டைவாய்த்தலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பேட்டைவாய்த்தலை, பழங்காவேரி, பழையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, இனுங்கூா், கவுண்டம்பட்டி, கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகள்.
சிறுகமணி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக, வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம், அணலை, திருப்பராய்த்துறை, எலமனூா், கொடியாலம், முக்கொம்பு ஆகிய பகுதிகள்
அளுந்தூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திமா நகா், சூறாவளிப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூா், மேலபச்சகுடி, அரசுக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐஐஐடி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 14) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
