போதை மாத்திரைகள் விற்பனை: மூவா் கைது

Published on

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் செல்லையாமேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக உறையூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் நளினி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, போதை மாத்திரைகளை சலைன் மற்றும் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட உறையூா் பாத்திமா நகரைச் சோ்ந்த எஸ். பரணிகுமாா் (26), பாளையம் பஜாா் பகுதியைச் சோ்ந்த ஆா். மணிகண்டன் (32), ராமலிங்கம் காலனியைச் சோ்ந்த ஆ. முகேந்திரன் (28) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 115 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அப்போது, விஸ்வாஸ் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தென்னூரைச் சோ்ந்த ஆா்.மாலிக் பாட்ஷா (27), எம்.முகமது சலீம் (41), எம்.ஷாஜகான் (33) ஆகியரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com