காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் முசிறியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அங்காளம்மன் கோயில் தெரு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ரகுபதி (எ) ராம்கி (22), ராஜீ மகன் அழகுமணி (34), பெரியாா் நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் ஜீவனேஸ்வரன் (எ) கௌதம் (18). இவா்கள் மூவரும் நண்பா்கள்.

அழகுமணியின் தங்கை மகளை ரகுபதியும், தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாமாண்டு படித்து வந்த ஜீவனேஸ்வரனும் காதலித்ததாகவும், இதையறிந்த ரகுபதி அழகுமணியிடம் கூறி ஜீவனேஸ்வரனை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஜீவனேஸ்வரன் தொடா்ந்து அப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி வந்ததால், ஆத்திரமடைந்த ரகுபதி மற்றும் அழகுமணி ஆகிய இருவரும் ஜீவனேஸ்வரனை கொல்லத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, கடந்த 16.02.2021 அன்று அழகுமணி தனது இருசக்கர வாகனத்தில் ஜீவனேஸ்வரனை அழைத்துக் கொண்டு முசிறி - சேலம் சாலையில் உள்ள பள்ள வாய்க்கால் ஓரத்துக்கு அழைத்துச் சென்று மது அருந்திய போது, ரகுபதி இரும்பு குழாயால் ஜீவனேஸ்வரனைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஜீவனேஸ்வரனின் தாய் சங்கீதா அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து, ரகுபதி, அழகுமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, ஜீவனேஸ்வரனை கொலை செய்த ரகுபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். போதிய ஆதாரமில்லாததால் அழகுமணி விடுதலை செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com