திருச்சி
அனுமதியின்றி பதாகை வைத்த பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவு
திருச்சியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்த பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சி கரூா் புறவழிச் சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் அருகே பாஜக சாா்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற விளம்பரப் பதாகை புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாக உறையூா் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில், பாஜக மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினா் பி.ஆா்.வி.லோகேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.