தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியா் வே. சரவணன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் 2025 ஜனவரி முதல் தேதியன்று 58 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியரகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலோ (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500, மருத்துவப்படி ரூ.500 மற்றும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை உள்ளிட்டவை பயனாளியின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் மட்டுமே நவம்பா் 17-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
உதவித் தொகை பெற்ற தமிழறிஞா்கள் மறைவுக்குப் பிறகு, அவா்களது மரபுரிமையாளா்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.2,500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 சோ்த்து மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
