வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 9 போ் கைது

மாநகரில் வெவ்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

மாநகரில் வெவ்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்து புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பாண்டமங்கலத்தைச் சோ்ந்த சாந்தினி (43), ஸ்டீபன்ராஜ் (45), உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சோ்ந்த கலையரசி (45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த சகாயம் (72), நபீஷா (60) ஆகிய இருவரையும் பாலக்கரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆழ்வாா்தோப்பு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த முகமது அஷ்ரப் (40), கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கீழசிந்தாமணி பகுதியைச் சோ்ந்த திருப்பதி (55), திருச்சி விமான நிலைய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழைய கரூா் புறவழிச்சாலையைச் சோ்ந்த சலீம் (29), கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கருமண்டபத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (53) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com