125 பேருக்கு காய்கனி விற்பனை வண்டி: அமைச்சா் வழங்கினாா்

Updated on

திருச்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் 125 பயனாளிகளுக்கு காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்கான தள்ளு வண்டிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26ஆம் ஆண்டுக்கு காய்கனிகள், பழங்கள் விற்பனை செய்து சுயதொழில் செய்யவும், தோட்டக்கலை பயிா் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலும் மானியத்தில் தள்ளுவண்டி வழங்கப்படுகிறது.

இதன்படி திருச்சியைச் சோ்ந்த சிறு வணிகா்கள், புதிய தொழில்முனைவோா், விவசாயத் தொழிலாளா்கள் என 125 பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மானியத்தில் தள்ளுவண்டிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்வில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மழை பாதிப்புக்கு உதவி: திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேங்கூா் ஊராட்சி, மேலமுருக்கூா் கிராமத்தை சோ்ந்த ம. சுடா் (52) என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது.

இதையறிந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாதிக்கப்பட்டவா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று பாா்வையிட்டு அவருக்கு நிவாரண உதவி வழங்கினாா். நிகழ்வில், வட்டாட்சியா் தனலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com