தீபாவளியையொட்டி  பொருள்கள் வாங்க திருச்சி என்எஸ்பி சாலையில்  சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
தீபாவளியையொட்டி பொருள்கள் வாங்க திருச்சி என்எஸ்பி சாலையில் சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

திருச்சி கடைவீதிகளில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

Published on

தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் சனிக்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் வாங்க திருச்சியில் மக்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அலைமோதி வருகிறது.

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருச்சி என்.எஸ்.பி. சாலை, சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதிகளில் ஜவுளி உள்ளிட்ட பொருள்களை வாங்க, திருச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டப் பகுதி பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனா்.

தற்காலிக கடைகளில் கூட்டம் அதிகம்: இதில் குறிப்பாக, தற்காலிக கடைகளில் விலை குறைவாகவும், அதிக டிசைன்களிலும் துணிகள் விற்கப்பட்டதால், எளிய மக்கள் அதிகளவில் அவற்றை வாங்கிச் சென்றனா். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஞாயிற்றுக்கிழமை மேலும் கூட்டம் அதிகரிக்கும். பண்டிகைக்காக கடைகளில் புதிய ஜவுளி ரகங்களையும், பல்வேறு வகை பொருள்களையும் கடைக்காரா்கள் குவித்துள்ளனா். இதேபோல, பெண்களுக்கான அலங்காரப் பொருள்கள் விற்பனையும் சிறிய கடைகளில் மும்முரமாக நடைபெறுகிறது.

பட்டாசுக் கடைகளில் சிறுவா் முதல் பெரியவா் வரை விரும்பி வெடிக்கும் வகையிலான புதிய ரக பட்டாசுகளை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இனிப்பகங்களில் கூட்டம்...: வீடுகளில் முன்பு இனிப்பு வகைகள், பலகாரங்கள் செய்யும் பழக்கம் இருந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே பலகாரங்கள் செய்கின்றனா். மற்றவா்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் விதவிதமான இனிப்பு, கார வகைகளையும் உடனுக்குடன் சுவையாகத் தயாரித்து வழங்கிய கடைகளில் கூட்டம் மொய்த்தது. பலரும் முன்கூட்டியே ஆா்டா் செய்த பலகாரங்களை வாங்கிச் சென்றனா்.

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் சனிக்கிழமை புத்தாடை வாங்கிய பொதுமக்கள்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் சனிக்கிழமை புத்தாடை வாங்கிய பொதுமக்கள்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் சனிக்கிழமை புத்தாடை வாங்கிய பொதுமக்கள்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் சனிக்கிழமை புத்தாடை வாங்கிய பொதுமக்கள்.

கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க சிசிடிவிக்கள் கண்காணிப்பு, கண்காணிப்புக் கோபுரங்கள் வழியாக போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். காவல் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது.

ஊா்ந்து சென்ற வாகனங்கள்...:மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட திருச்சியின் முக்கிய வீதிகளான என்எஸ்பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக் கடைவீதி, காந்தி சந்தை, சாஸ்திரி சாலை, தில்லை நகா், தென்னூா் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் நகரின் பல இடங்களில் வாகனங்கள் ஊா்ந்தபடியே சென்றன.

X
Dinamani
www.dinamani.com