மணப்பாறையில் வீடுபுகுந்து நகை, பணம் திருடியவா் கைது

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையில் கோவில்பட்டியிலிருந்து முத்தன் தெரு செல்லும் அய்யம்பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் ராமையா மகன் ரவீந்திரன்(70), திருச்சி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்.

இவா் புதிய வீடு கட்டி வசிக்கும் நிலையில், பழைய வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான வைரத்தோடு, வைர மோதிரம், தங்க மோதிரங்கள்உள்ளிட்ட சுமாா் 7 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம், பின் நம்பா் எழுதியிருந்த ஏடிஎம் காா்டு ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

பின்னா் அந்த ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 35 ஆயிரம் எடுத்த குறுஞ்செய்தி ரவீந்திரனின் கைப்பேசிக்கு வந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் மணப்பாறையில் சனிக்கிழமை வாகன தணிக்கையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய சிதம்பரத்தான்பட்டி அருகேயுள்ள ஜெஜெ நகரை சோ்ந்த ராபா்ட் மகன் சந்தோஷ்குமாரை (22) காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவா் ரவீந்திரன் வீட்டில் திருடியவா் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து நகை, பணத்தை போலீஸாா் கைப்பற்றி, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com