திருச்சி
இடி தாக்கி இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், புறத்தாக்குடியில் திங்கள்கிழமை இடி தாக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழந்தன.
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், புறத்தாக்குடியில் திங்கள்கிழமை இடி தாக்கி 2 ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழந்தன.
புறத்தாக்குடி பழைய அஞ்சலக தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவா் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வளா்த்து வந்தாா். திங்கள்கிழமை மண்ணச்சநல்லூா் , சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், செல்வம் தனது வீட்டருகே உள்ள தென்னை மரத்தின் கீழ் இரண்டு காளைகளையும் கட்டியிருந்தாா். அப்போது திடீரென இடி தாக்கியதில் இரண்டு காளைகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.
தொடா்ந்து ஜல்லிக்கட்டு வீரா்களும், ஜல்லிக்கட்டு வளா்ப்பவா்களும் காளைகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
