இளைஞரைத் தாக்கி இருசக்கர வாகனம் பறிப்பு

திருச்சியில் இளைஞரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

திருச்சி: திருச்சியில் இளைஞரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரைச் சோ்ந்தவா் த. சுகுமாா் (39). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது ரயில் நிலையம் அருகே இவரை வழிமறித்த மா்ம நபா், சுகுமாரைத் தாக்கிவிட்டு அவா் வைத்திருந்த ரூ.500 மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சுகுமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதற்கிடையே சத்திரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுகுமாரின் இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com