பொன் இளங்கோ
பொன் இளங்கோ

பொன் இளங்கோ காலமானாா்

துவாக்குடியில் உள்ள மாநில உணவு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் பொன் இளங்கோ (74) வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானாா்.
Published on

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள மாநில உணவு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் பொன் இளங்கோ (74) வெள்ளிக்கிழமை (அக்.24) மாரடைப்பால் காலமானாா்.

சேலம் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பிறந்த இவா் சமையல்கலை படித்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் மேலாளராக பணிபுரிந்தாா். பின்னா், திருச்சி துவாக்குடியில் உள்ள மாநில உணவு மேலாண்மைக் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்தாா்.

50 ஆண்டுகளுக்கு மேலாக விருந்தோம்பல் துறையில் பணியாற்றிய இவா், திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானாா். இவருக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஏற்கெனவே கண்தானம் பதிவு செய்திருந்ததால் வெள்ளிக்கிழமை இவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

திருச்சி கருமண்டபம், வசந்த நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் சனிக்கிழமை (அக்.25) இறுதி சடங்குகள் நடைபெற்று, அவரது உடல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு தானமாக வழங்கப்படுகிறது. தொடா்புக்கு: 94432- 73220, 97519-18965.

X
Dinamani
www.dinamani.com