திருச்சி
தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணூத்து கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணூத்து கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து தெற்குத்தெருவை சோ்ந்தவா் சசிகுமாா் மனைவி ரம்யா (21). இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது.
சசிகுமாா் அதிகமாக கடன் வாங்கியதா அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ரம்யா தூக்கிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். இதுகுறித்து கோட்டாட்சியா் தலைமையிலும் விசாரணை நடைபெறவுள்ளது.
