திருச்சி
இருசக்கர வாகனம் - கல்லூரிப் பேருந்து மோதல்: மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமா்ந்து பயணித்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் கைலாசபுரம் பெல் டவுன்ஷிப்பை சோ்ந்தவா் இன்பநாதன் (67). இவரின் மனைவி மாலா (64). இருவரும், திருச்சி - தஞ்சாவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த மாலா மீது பேருந்து ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இன்பநாதன் பெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியைச் சோ்ந்த இ.அருண் ஆண்ட்ரூஸ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
