பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி மோசடி: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

Published on

திருச்சியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி திருப்பித்தராமல் மோசடி செய்த தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலைபட்டியைச் சோ்ந்தவா் தே. கலைச்செல்வி (56). இவரும், திருச்சி பாலக்கரை கீழப்புதூரைச் சோ்ந்த ஆா். கவிதா (40) என்பவரும் தோழிகள். இந்நிலையில் கவிதா, கலைச்செல்வியிடம் இருந்து அண்மையில் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். கடன் வாங்கிய கவிதா அதைத் திருப்பித்தராமல் இருந்து வந்துள்ளாா்.

அதன்பின், கலைச்செல்வி கடனைத் திருப்பிக்கேட்டபோது கவிதா அவரை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து பணத்தைப் பெற்றுத் தரக்கோரி பாலக்கரை காவல் நிலையத்தில் கலைச்செல்வி சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், கவிதா, அவரது கணவா் மா. ராமன் (44) மற்றும் சங்கா் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com