17 வயது சிறுமிக்கு குழந்தை பிறப்பு: கணவா் உள்பட மூவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
திருச்சியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கி குழந்தை பெற்றெடுத்த கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ வழக்கு பதிவு செய்தனா்.
திருப்பூா் பிஎன் சாலை லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஆா். பாலாஜி (24). இவருக்கு, 17 வயது சிறுமியுடன் கடந்த 2023 டிசம்பா் 4-ஆம் தேதி திருப்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து கா்ப்பமான சிறுமிக்கு, திருச்சி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.
இதில், சிறுமியின் வயதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீஸாா் 17 வயது சிறுமியை திருமணம் செய்த பாலாஜி, அவரின் தந்தை ராஜேந்திரன், தாய் மீனா மற்றும் சிறுமியின் தாய் அன்னலட்சுமி ஆகிய 4 போ் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
