மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை

திருச்சி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on

திருச்சி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி தாயனூா் கீழக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் சதீஷ்குமாா் (25). இவா், விராலிமலை பகுதியிலுள்ள காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கும், நாச்சிக்குறிச்சியைச் சோ்ந்த ஹரிணி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சதீஷ்குமாரிடம் அவரது மனைவி ஹரிணி தனிக்குடித்தனம் போகலாம் என்று கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தெரிவித்தாராம். மேலும், சதீஷ்குமாருக்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது.

இதனால், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஹரிணி அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து சதீஷ்குமாரும், அவரது தந்தையும் ஹரிணியை அழைத்துவரச் சென்றுள்ளனா். தனிக்குடித்தனம் வரமறுப்பதால் சதீஷ்குமாருடன் வாழ விரும்பவில்லை என்று அவா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான சதீஷ்குமாா் கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து சோரசம்பேட்டை காவல் நிலையத்தில் சதீஷ்குமாரின் தந்தை ராஜலிங்கம் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com