Enable Javscript for better performance
திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிக்க கோரிக்கை

    Published on : 20th September 2012 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி, அக்.31:அரசு விழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் திருநங்கைகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திருநங்கைகளின் பெண்கள் தாய் விழுதுகள் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.

      தருமபுரியில் சனிக்கிழமை பெண்கள் தாய் விழுதுகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற திருநங்கைகளின் கலை நிகழ்ச்சியில் மொரப்பூர் எம்எல்ஏ வ.முல்லைவேந்தன் கலந்துகொண்டார்.

      நிகழ்ச்சியில் அவர் பேசியது:

      தமிழக அரசு அரவானிகள் என்பதை திருநங்கைகள் என பெயர் மாற்றம் செய்து சமூகத்தில் அதிக முன்னுரிமை வழங்கியுள்ளது.

      பள்ளி, கல்லூரிகளில் இவர்களுக்கு தனி இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து கல்வியில் இடஒதுக்கீடும் வழங்கியுள்ளது.

      அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறும் வகையில் இவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

      தங்களுக்கு அரசு கலை நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திருநங்கைகள் கேட்டுக் கொண்டனர்.

      நிகழ்ச்சியில் வருவான் வடிவேலன் கல்லூரி தாளாளர் வடிவேலன், லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நாட்டான்மாது, நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai