திருவண்ணாமலை, டிச. 18: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
÷திருவண்ணாமலை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கும், பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் ஷாகின், செய்யாறு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோ.பாண்டியன் பிறப்பித்துள்ளார்.