வேலூர், டிச. 18: வேலூரில் காணாமல்போன மாணவர் பெங்களூரில் மீட்கப்பட்டார்.
கொசப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரிஷ் (15). பிளஸ் 1 மாணவரான இவர், வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் சங்கரன்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அரிஷ் முகத்தில் துணியைப் போட்டு மூடி பெங்களூருக்கு கடத்திச் சென்றனராம்.
அவர்களிடமிருந்து தப்பிய அரிஷ் தனது தந்தைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாராம். அவரது தந்தை பெங்களூர் சென்று அரிஷை மீட்டுவந்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.