ஆம்பூர், டிச. 18: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீ மஹா விஷ்ணு சேவா சங்கம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு சனிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
÷ வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் டி.கங்கப்பா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க வேலூர் கிளை தலைவர் சுவாமி அகின்ஜன கிருஷ்ணதாஸ் சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பணி மன்ற தலைவர் ஏ.பி.மனோகர், ஆம்பூர் இந்து கல்விச் சங்க செயலர் ஏ.ஆர். சுரேஷ்பாபு, பொருளாளர் ராமமூர்த்தி, ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவா சங்க நிர்வாகிகள் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர், எம்.பழனி, கே.எத்திராஜ், ஜி.பிரபு, ஜி.கண்ணன், சி.கோபிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.