குடியாத்தம், டிச. 26: குடியாத்தத்தில் வெண்மணி தியாகிகள் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அமைப்பின் தாலுகா தலைவர் பி.சாமிநாதன் தலைமை தாங்கினார். தாலுகா செயலர் சி.நெடுஞ்செழியன் வரவேற்றார்.
மாவட்டச் செயலர் கே.சாமிநாதன், சிஐடியூ தாலுகா செயலர் பி.குணசேகரன், மாவட்ட துணைச் செயலர் பி.காத்தவராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் என்.ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.