நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாக விருதோடு "பசுமைக் கோயில்' விருதும் பெறுகிறது பொற்கோயில்

வேலூர், அக். 26: நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் மற்றும் பசுமைக் கோயில் விருதுகளைப் பெறுகிறது வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்.  வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீசக்தி அம்மாவால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட பொ

வேலூர், அக். 26: நாட்டின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் மற்றும் பசுமைக் கோயில் விருதுகளைப் பெறுகிறது வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில்.

 வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீசக்தி அம்மாவால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட பொற்கோயிலில், 70 ஏக்கர் பரப்புக்கு பசுமைப் போர்வை எனும் வகையில் மரங்களும், பூஞ்சோலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 ஸ்ரீசக்தி அம்மா காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், அருகேயிருக்கும் கைலாசகிரி மலையில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்தி அம்மா காடு வளர்ப்பு மற்றும் பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ் ஸ்ரீநாராயணி பீட வளாகம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சாலையோரங்கள், பொதுமக்களுக்கு என சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

 திடக் கழிவுத் திட்டம் மூலம், தினசரி 2 டன் திடக் கழிவுகளைச் சேகரித்து இயற்கை உரம் தயாரிக்கின்றனர்.

இவற்றைக் கொண்டு, இயற்கை வேளாண்மை மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்து, அன்னதானத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

 மேலும், காகிதக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என 23 வகை கழிவுகளைத் தனித்தனிúயை பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புகின்றனர்.

 இதுதவிர, திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் தினசரி 4.5 லட்சம் லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரித்து, அதன் மூலம் கிடைக்கும் நீரை 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளை நிலங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

 ஸ்ரீநாராயணி பீடத்தின் கோசாலாவில் இருந்து கிடைக்கும் 3 டன் சாணத்தின் மூலம் தினமும் 50 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து, பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

 மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ், கால்வாய்கள், குளங்கள், நீர் உரிஞ்சும் தொட்டிகள் மூலம் நீரைச் சேகரிக்கின்றனர். சாகம்பரி இயற்கை முறை விவசாயத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்கின்றனர்.

இத்திட்டத்தின்கீழ் சிறப்பாக விவசாயம் செய்யும் விவசாயிக்கு ஆண்டுக்கு  1 லட்சம் பரிசளிக்கப்படுகிறது.

 கோயில் வளாகம் முழுவதும் பசுமைப் போர்த்திய புல் வெளிகளாகக் காட்சியளிப்பதோடு, பல்வேறு நடவடிக்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சிறப்பான பங்களிப்பை ஸ்ரீபுரம் பொற்கோயில் அளித்து வருகிறது.

 இதைப் பாராட்டி, இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் எனும் விருது மற்றும் பசுமைக் கோயில் விருது ஆகியவற்றை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு வழங்குகிறது.

இதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீசக்தி அம்மாவிடம் புதன்கிழமை (அக்டோபர் 27) வழங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com