வாலாஜாபேட்டை, ஜன. 8: ஆர்க்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சரவணன் (35). இவருக்கு வனரோஜா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், சரவணன், அவரது தாய் காசியம்மாள் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக வனரோஜா அளித்த புகாரின்பேரில், திமிரி போலீஸôர் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.