வேலூர், ஜன. 29: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மாவட்ட அளவிலான தர்னா போராட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டணியின் மாவட்டத் தலைவர் வி.கமலநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செ.சரவணன் தர்னாவை துவக்கி வைத்தார்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
கூட்டணியின் முன்னாள் தலைவர் மா.ச. முனுசாமி தர்னாவை முடித்துவைத்து
பேசினார்.